வெள்ளி வாங்கும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
வணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் நாம் காண இருப்பது வெள்ளி நகைகளை வாங்கும் பொழுது எப்படி சரியான முறையில் வாங்குவது ? நாம் என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் ? என்பதைப் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.
நமது silverratetoday.com வலைதளத்தில் கடந்த பத்து வருடத்தில் வெள்ளியின் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள், தினசரி வெள்ளியின் விலை, தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் வெள்ளி விலையின் நிலவரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி சம்பந்தப்பட்ட அனைத்து வகையான விபரங்கள் அடங்கிய Calculator அனைத்தும் நமது முகப்பு பக்கத்தில் உள்ளது.
வெள்ளியை பயன்படுத்தி ஆபரணங்கள் செய்யும் நடைமுறை கி.மு 3500 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை இருக்கிறது.
வெள்ளியை வைத்து நகைகள் (அணிகலன்கள்) செய்வதற்கு மட்டுமன்றி பூஜை பொருட்களுக்கும் நாம் பயன்படுத்துகிறோம்.
இன்றைய காலகட்டத்தில் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் வெள்ளியில் (Silver) முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இப்படி நாம் வாங்கும் வெள்ளி நகைகளானது பிற்காலத்தில் நமக்கு பயன்படுமாறு அமைவதற்கு நாம் ஒரு சில விஷயங்களை கட்டாயமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
வெள்ளி வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை:
நீங்கள் எந்த நகையை வாங்குவதாக இருந்தாலும், நகையை வாங்குவதற்கு முன்பு ஒரு சில விஷயத்தை கட்டாயமாக தெரிந்து கொண்ட பின்னர் நகையை வாங்க வேண்டும்.
நாம் இந்த பதிவில் வெள்ளியை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அந்த வகையில் நீங்கள் வாங்கும்போது அன்றைய தினத்தில் வெள்ளியின் விலை எவ்வளவு ? வெள்ளியின் எடை எவ்வளவு ? அதற்கான செய்கூலி, சேதாரம் எவ்வளவு சதவீதம் போடப்படுகிறது என்று தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.
நீங்கள் வாங்கிய வெள்ளி நகைகளுக்கான கட்டணத்தில் செய்கூலி, ஹால்மார்க் கட்டணம், ஜிஎஸ்டி வரி போன்றவற்றையும் சரியாக உறுதிப்படுத்தி வாங்க வேண்டும்.
வெள்ளி நகைகளை வாங்கும் முறை:
பொதுவாக, நகைக் கடைகளில் வெள்ளி வாங்கும் பொழுது நீங்கள் வாங்கும் நகைக்கான கட்டணத்தை தனியாகவும், செய்கூலி கட்டணம் தனியாகவும் வசூல் செய்வார்கள். ஒரு சில நகைக் கடைகளில் நீங்கள் வாங்கும் வெள்ளியுடன் செய்கூலி கட்டணத்தையும் சேர்த்து வசூலிப்பார்கள். இது போன்ற சூழ்நிலைகளில் கட்டணத்தை வசூலிக்கும் பொழுது வெள்ளி நகைகளுக்கான ரசீதை பெறுவது மிகவும் அவசியம்.
வெள்ளி கொலுசுகளை நீங்கள் வாங்கும் பொழுது அதில் சில அழகான கற்கள் (கல்) பதிக்கப்பட்டிருக்கும். கல் பதிக்கப்பட்டிருக்கும் எந்த நகைகளுக்கும் தனியான மதிப்புகள் கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒரு சில கடைகளில் கல் பதிக்கப்பட்டிருக்கும் நகைகளுக்கு தனியாக மதிப்பு குறிப்பிட்டுள்ளார்களா என்று கவனித்து பார்த்து வாங்குவது நல்லது. அது மட்டும் இல்லாமல் அந்தக் கற்களுடன் சேர்த்து வெள்ளியின் எடை இருக்கிறதா என்று கவனித்துப் பார்த்து வாங்க வேண்டும்.
நம்மில் பலருக்கு ஒரு பிரச்சனை இருக்கும். அதாவது வெள்ளி நகைகளை வாங்கி நாம் அணியும் போது உடல் வெப்பத்தினால் வெள்ளி நகைகள் இரண்டு நாட்களில் கருத்துவிடும். எனவே இதுபோல் வெள்ளி நகைகள் கருத்து போகாமல் இருப்பதற்காக வெள்ளியில் ரேடியம் என்னும் உலோகத்தை கலக்கிறார்கள். இது போன்ற வெள்ளி நகைகள் வேண்டும் என்றால் வெள்ளி வியாபாரிடம் கேட்டு பெற்றுக்கொள்ளலாம்.
இதுபோன்ற பல விஷயங்களை நீங்கள் தெரிந்து கொண்டு நகையில் முதலீடு செய்வது சிறப்பு.
